உயிரிழந்த பிரபல வர்த்தகரின் வியாபாரத்தில் நாளுக்கு நாள் ஏற்பட்ட நஷ்டம்! நீடிக்கும் மர்மம்
படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் விவகாரம், பத்து நாட்கள் கடந்தும் மர்மம் நீடித்து வருகிறது.
கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலகக்குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலாசனையின் கீழ் இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் நடைபெறுகின்றன.
குற்றப்புலனாய்வு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன. எனினும் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை, இதனாலேயே விசாரணைகள் தொடர்கின்றன.
பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் சாப்டர் பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்திருந்தார். அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்குமூலங்களூடாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
