ஈழத் தமிழர்கள் தொடர்பில் அமெரிக்காவில் முக்கிய தீர்மானம்! இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
அமெரிக்க காங்கிரஸில் டெபோரா ரோஸ் என்ற பெண் உறுப்பினர் முன்மொழிந்த இலங்கையின் வடக்கு கிழக்கு தொடர்பிலான தீர்மானம் குறித்து இலங்கை தமது கவலைகளையும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த விடயத்தில் உடனடி தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கோரிக்கை விடுத்தார்.
குறித்த முன்மொழிவை திரும்பப் பெறுவதற்கோ அல்லது திருத்துவதற்கோ சபையின் வெளியுறவுக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரி மார்டின் டி. கெல்லி இன்று வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அமைச்சரால் இந்த வேண்டுகோளை விடுக்கப்பட்டது.
இந்த தீர்மானம் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது என்று அமைச்சர் இதன்போது விளக்கினார். இலங்கைக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட ஆதரவுக்கு வெளியுறவு அமைச்சர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கொவாக்ஸ் திட்டத்தின் மூலம் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் நாடுகளில் இலங்கை ஒன்றாகும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்பை அவர் வரவேற்றார்.
You My Like This Video



