தனியார் பேருந்து சாரதிகளில் 80 வீதமானோர் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர் -திலும் அமுனுகம
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகளில் 80 வீதமானவர்கள் மதுபானம் உட்பட போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு, பேருந்துகளை ஓட்டுவதாக தெரியவந்துள்ளது என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனால், கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் மதுபானத்திற்கு அடிமையாகி இருக்கின்றனரா என்பதை கண்டறிய எதிர்காலத்தில் பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
வீதி நலன் பரிசோதனைகள் சம்பந்தமான யோசனைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri