பங்குச் சந்தை மோசடி குறித்து திலித்திடம் விசாரணை
பங்குச் சந்தையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து சர்வஜன பலய கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
விசாரணகைளுக்காக திலித் ஜயவீரவை இன்று (12) காலை இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி காலமான 2010 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து இன்று திலித்திடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதேவேளை, முக்கிய பிரமுகர்களான நிமல் பெரேரா, ரெனோ டி சில்வா, அசோக் பாதிரகே மற்றும் தரங்க தோரதெனிய ஆகியோரும் வரவிருக்கும் நாட்களில் பங்குச் சந்தை முறைகேடு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.