திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானம்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தவத்திருவேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் நல்லை ஆதீனத்தில் நேற்று (19.09.2022) இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைக்கான பயணம்
மேலும், “நினைவேந்தலை முன்னெடுக்கின்ற போது எந்தவித முரண்பாடும் இன்றி, யாரும் எந்தவித
சுய இலாபத்திற்கும் இதனை பயன்படுத்தாத வகையில் ஒட்டுமொத்த தமிழினமாக
விடுதலைக்கான பயணமாக குறித்த நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.
நினைவேந்தல் இம்முறை மிகவும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.
எங்களுடைய உறவுகள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். மக்கள் அனைவரும் இம்முறை எழுச்சியினை காட்ட வேண்டும்.
மக்கள் எழுச்சி
'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' என்ற
கோட்பாடுக்கு அமைய மக்களுடைய எழுச்சி எப்பொழுது ஏற்படுகின்றதோ அப்போதே
இனத்தினுடைய விடுதலை அனைத்துமே சாத்தியமாகும் என்பது நிதர்சனமான உண்மை.
அதனடிப்படையிலே இதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பு குழு செயல்பட்டு தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தலை மிக சிறப்பாக நினைவு கூறும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
