சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உட்பட இரு உயரதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் (Dileepa Peiris) உட்பட இரு பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால இது தொடர்பில் தெரிவித்துள்ள மேலதிக விபரங்கள்,
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் (Dileepa Peiris),குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் CID பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர (Shani Abeysekara),ரவி செனவிரத்ன (D.W.R.B. Seneviratne)பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கே உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனின் சதித்திட்டம்
இதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் அம்பலாங்கொடையில் முகாமையாளர் ஒருவர் சுட்டுக்கொண்ட துப்பாக்கித் தாரிகள் கிரிபத்கொடை ரன்மாத்தியா என்பவரின் காரில் கண்டியில் உள்ள தேசபந்து தென்னகோனின் ஆடம்பர வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசபந்து தென்னகோன் சாதாரண பொலிஸ் மா அதிபர் அல்ல. பல அரசியல் கட்சிகளில் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்.இவர் கரந்தெனிய சுந்தா என்ற பாதாள குழுவின் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

கரந்தெனிய சுந்தா, துப்பாக்கித் தாரிகளிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நான் தான் கண்டியிலுள்ள வீட்டை தென்னகோனுக்கு கட்டி கொடுத்தேன் அங்கு போய் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் அன்றும் பாதாள குழுவினருடன் தான் இருந்தார்.ஆனால் இன்று அவர்களுடன் இணைப்பை ஏற்பத்தியுள்ளமை,பாரிய குற்றச் செயலுக்கான திட்டமாகவே கருதப்படுகிறது.
கொலை செய்வதற்கான காரணங்கள்
மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தான் முதன் முதலாக தென்னகோனின் வழக்கை கையாண்டவர்.அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஆகியவற்றை இவர் தான் முன்னெடுத்த செல்லவுள்ளார்.
இவர்களுக்கு திலீப பீரிஸ் பெரும் தலைவலியாகவே மாறியுள்ளார்.அத்தோடு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் இவர் ஒரு அச்சுறுத்தலாகவே காணப்படுகிறார்.அதனால் இவரை கொலை செய்வதற்கான தேவை கண்டாயம் இருக்கிறது.

அதனால் தான் தேசபந்து தென்னகோன் பாதாள உலகத்தினரை கொண்டும் திலீப பீரிஸ் கொலை செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.அத்தோடு ரவி செனவிரத்ன (D.W.R.B. Seneviratne) ஷானி அபேசேகர (Shani Abeysekara) இவர்களிடம் பல அரசியல் வாதிகள் மற்றும் தேசபந்து தென்னகோன் போன்றோரால் செய்த குற்றச் செயல்களுக்கான தகவல்கள்- சாட்சியங்கள் மற்றும் ஆணவங்கள் இருக்கிறது.
இவர்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும்.இவற்றை மூடிமறைப்ப தென்றால் இந்த மூவரும் கொலை செய்யப்படுவதே சிறந்த தீர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.