முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில்
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, GovTec நிறுவனம், இலங்கை டெலிகொம் - மொபிடெல் நிறுவனம், கொழும்பு தாமரைக் கோபுரம் நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.

இந்த ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது தொடர்பான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பொதுமக்கள் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் மிகவும் செயற்திறனாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GovPay வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.



இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri