இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை முன்னெடுக்க சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான ஒரு பகுதியை இந்திய உதவி மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri