பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
பிரித்தானியாவில் இன்று முதல் முன்னாள் படைவீரர்கள் டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரப்பினும், வேலை செய்யும் உரிமை தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டாய சோதனைகளிலிருந்து இந்தத் திட்டம் வேறுபட்டது என கூறப்படுகிறது.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பெரியவர்களும் டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்ற லேபர் கட்சியின் பிரதான திட்டத்தின் ஒரு பகுதி என்றே கூறுகின்றனர்.
முன்னாள் இராணுவ வீரர்
டிஜிட்டல் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறும் முன்னாள் படைவீரர்கள், அவர்கள் முன்னாள் இராணுவ வீரர் என்பதை உறுதி செய்து, தொடர்புடைய சேவைகளை அணுக இந்த அடையாள அட்டை அவர்களுக்கு உதவும்.
அமைச்சர் இயன் முர்ரே தெரிவிக்கையில், முன்னாள் படைவீரர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டையானது, மொத்த பிரித்தானிய மக்களுக்குமான டிஜிட்டல் அடையாள அட்டை கொள்கையின் முன்னோட்டமாகும் என்றார்.
கிட்டத்தட்ட 300,000 முன்னாள் வீரர்களுக்கு டிஜிட்டல் அட்டை வழங்குவதுடன், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அரசு கண்காணிக்க முடியும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
