அஸ்வெசும கொடுப்பனவுகளினால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
நாட்டில் 130,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு, துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிக்கலான நிலை
மேல்முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தவறியது போன்ற காரணங்களால் 130,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாத சிக்கலான நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, நலன்புரி வாரியத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகளைக் கோரியவர்களில், தேர்ந்தெடுக்கப்படாத குழு இருப்பதாகவும், அந்தக் குழு தற்போது தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam