இறக்குமதி அரிசியை உள்ளூர் சந்தையில் விற்பதில் சிரமம் உள்ளதாக கூறும் இறக்குமதியாளர்கள்
தேவையான அரிசி கையிருப்பு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அவற்றை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அரிசி இறக்குமதியாளர் தெரிவித்துள்ளனர்
தாம், 20 கொள்கலன்களில் 500 தொன் அரிசியை இறக்குமதி செய்ததாக, தெரிவித்துள்ள, கொழும்பு புறக்கோட்டை சந்தையிலிருந்து இறக்குமதியாளர் ஒருவர், தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
அரசாங்கம் கோரியபடி, தாம் டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அரிசி கையிருப்புகளை இறக்குமதி செய்தபோதும், இப்போது சுங்கத்திலிருந்து இருப்புகளை வெளியேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்க வரி
அதிக சுங்க வரி அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன.
தாம் சுங்க வரியாக ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வரி அதிகரிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சுடன் கலந்துரையாடியபோதும்,. அவர்கள் அதனை நீக்க மறுத்துவிட்டனர்.
ஒரு கிலோ அரிசிக்கு
முன்னதாக ஒரு கிலோ அரிசிக்கு 25 சதங்கள் மட்டுமே சுங்க வரி விதிக்கப்பட்டது. இதன்படி, சுங்க வரி மற்றும் பிற சேவை வரிகளை செலுத்திய பிறகு, ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 232 ரூபாயாக இருந்தது.
இருப்பினும், அரிசிக்காக அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையால் ஒரு கிலோ அரிசியை 230 ரூபாய்க்கு, நட்டத்தில் விற்பனை செய்யவேண்டியுள்ளது என்று குறித்த இறக்குமதியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |