கனடாவில் உள்ள விமான பயணிகளுக்கு இலவச Wi-Fi சேவை
கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
Air Canada, Air Canada Rouge மற்றும் Air Canada Express விமானங்களில் இந்த இலவச WiFi சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aeroplan உறுப்பினர்
வட அமெரிக்கா மற்றும் சன் மார்க்கெட் பயணிகளுக்கு முதலில் இச்சேவை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Air Canada offer free WiFi, Air Canada flight passengers, free WiFi on Plane இந்த இலவச WiFi சேவையைப் பெற அப்பயணி Aeroplan உறுப்பினராக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Aeroplan உறுப்பினராக இல்லாத பயணிகள் இந்த சேவையை குறைந்த கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளளாம் பயன்படுத்தலாம்.
இலவச பதிவு
மேலும், Aeroplan உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் இலவசமாக பதிவு செய்ய முடியும் என்றும், இந்த WiFi சேவை ஸ்ட்ரீமிங் தரத்துடன் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தொழில்துறையும் பொழுதுபோக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும், 2026ஆம் ஆண்டு வரை இந்த சேவையை நீண்ட தூர சர்வதேச விமானங்களுக்கும் விரிவுபடுத்த ஏர் கனடா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |