மட்டக்களப்பில் டீசலில் ஓடும் மண்ணெண்ணெய் வாகனங்கள்! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வருகின்ற இந்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (07.3.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோரிக்கை
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நேரத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் வாகனங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
வாழைச்சேனை, களுவங்கேணி, பாலமீன்மடு ஆகிய பிரதேசங்களில் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மண்ணெண்ணெய்யை வழங்கி ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்த மண்ணெண்யையை மட்டுப்படுத்தி வழங்காமல் விட்டால் எதிர்வரும் காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் தட்டுபாடு ஏற்படும்.
இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்