ஸ்கொட்லாந்தில் டீசல் திருட முயற்சி: நதிகளில் கலந்த எரிபொருள் - குடிநீர் விநியோகம் துண்டிப்பு
ஸ்கொட்லாந்தின் பெர்த்ஷையர் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் டீசல் திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்தால், சுமார் 800 கிலோமீட்டர் தூரம் பாயும் டோச்சார்ட் மற்றும் டே நதிகளில் டீசல் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எரிபொருள் கசிவு நதிகளின் வழியாகப் பரவி வருவதால், கில்லின் (Killin) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நதி நீரில் கலந்த டீசல்
நதி நீரில் டீசல் கலந்ததால் குடிநீரில் ஒருவித கரைப்பான் (Solvent) சுவை மற்றும் காற்றில் எரிபொருள் மணம் வீசுவதாகப் பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலால் லோக் டே மற்றும் டே நதிகளில் மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இறங்க வேண்டாம் என ஸ்கொட்லாந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிநீரைச் சுத்திகரிக்கும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், மக்களுக்கு குடிநீர் போத்தல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குழாய் நீரை கழிவறைகளைச் சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், குடிக்கவோ, சமைக்கவோ அல்லது பல் துலக்கவோ பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
நீரைத் தற்காலிகமாகச் சுட வைப்பதன் மூலம் டீசல் பாதிப்பை நீக்க முடியாது என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெர்த்ஷையர் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிற்கு முதலமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney) தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
நிலைமையைச் சீர்செய்யவும், குழாய்களில் உள்ள டீசல் படிவங்களை அகற்றவும் ஸ்காட்டிஷ் வாட்டர் (Scottish Water) அமைப்பினர் 24 மணிநேரமும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
எரிபொருள் திருட முயன்றபோது ஏற்பட்ட இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்களாகும் என்பதால், கில்லின் கிராமத்தில் மக்களுக்கு உதவ நடமாடும் உணவு வாகனங்கள் மற்றும் போத்தல் நீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam