மன்னாரில் டீசல் தட்டுப்பாடு - பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையினால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பானது மிகவும் குறைவான நிலையில் காணப்படுவதால் இன்று காலை முதல் வாகனம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் ஏனைய தேவைகளுக்கு கேண்கள் மற்றும் போத்தல்களுடன் வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
டீசல் இன்மையால் தூர இடங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து பல இடங்களில் டீசல் பதுக்கல் இடம்பெறுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட அதிக விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.







ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
