டீசல் கொள்கலன் விபத்து: சாரதியும் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு - முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை மெலிபன் தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதியில் விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில்,பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது.
இவ்விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பவுஸரில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக கினிகத்தேனை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.








ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
