லிந்துலையில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத்தொழிலாளி மரணம்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(17.07.2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் பம்பரக்கலை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான காளிமுத்து மாரியாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செடிகளுக்கு அடியில் குளவிகள் கூடு கட்டி வாழுகின்றது
பெருந்தோட்டங்களில் தேயிலை செடிகள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக
செடிகளுக்கு அடியில் குளவிகள் கூடு கட்டி வாழுகின்றது எனவும், கொழுந்து
பறிக்கும் தொழிலாளர்களை இவைகள் தாக்குவதால் தொடர்ந்தும் பாதிப்புக்கு
உள்ளாகுவதாகவும், இவ்வாறான மரணங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தோட்ட தொழிலாளியின் உடல் லிந்துலை ஆதார வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |