விநியோகிக்கப்படாத மூன்றரை இலட்சம் வாக்காளர் அட்டைகள்
பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் இன்று (14) மாலை வரை தபால் நிலையங்களில் தேங்கிக் கிடந்துள்ளன.
வாக்காளர்கள் உரிய முகவரிகளில் இருந்து வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தமை, வீடுகளில் இல்லாமை, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை போன்ற காரணங்களினால் குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள்
அவ்வாறான நிலையில் உரிய வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இன்றைய தினம் தங்கள் பிரதேச தபால் அலுவலகங்களுக்கு வந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இன்று மாலை வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri