வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்களா? ஶ்ரீலங்கா கிரிக்கட் விளக்கம்
இலங்கை கிரிக்கட் அணியின் வீர்ர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டுவன்ரி20 போட்டித் தொடரில் விளையாடிய சில வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வீரர்கள் மோசமாக விளையாடினார்கள் என எந்தவொரு முறைப்பாடும் அணி முகாமைத்துவத்திடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான செய்திகளை வெளியிடுவதனால் அணி வீரர்கள் பாதிக்கப்படக் கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam