தமிழர் பகுதியில் அநுரவின் 2345 கோடிரூபாய் திட்டம் - நடு நடுங்கும் பலர்
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய நீர்ப்பாசன முயற்சியான கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில் 2011 ஆம் ஆண்டு ரூ. 4,170 மில்லியன் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், மகாவலி அமைப்பின் 'எல்' மண்டலத்திற்குள் நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் தமிழர் பகுதிகளில் பல நீரேந்து பிரதேசங்கள் உள்ளன, அதனை விடுத்து வேறொரு திட்டத்தின் மூலம் அரசாங்கம் நுழைவது தான் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், இந்த அரசாங்கம் சில செயற்பாடுகளின் போது இதனை நாங்கள் செய்யவில்லை கடந்த அரசாங்கம் செய்தது, அதற்கு முன்னைய அரசாங்கம் செய்தது என்று கூறுகின்றது. ஆனால் எல்லா அரசாங்களின் கொள்கைகளும் ஒன்றாக தான் இருக்கின்றது.
இந்த திட்டம் பெரும் ஆபத்தாகத்தான் இருக்க போகின்றது, தமிழர்களின் இடங்கள், அடையாளங்கள் இதனால் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam