உலக சந்தை வரலாற்றில் உச்சம் தொட்டிருந்த தங்க விலையில் திடீர் மாற்றம் - இலங்கையில் பதிவான நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (22.01.2026) காலை 4790 டொலர்களாக பதிவாகியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக 4800 என்ற எல்லையைத் தாண்டிய உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று இந்த சரிவு நிலை பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, நேற்று (21) ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்திருந்தது.
இருப்பினும், இன்று (22) தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 381,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் (21.01.2026) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 385,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 356,125 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri