விகாரை விடயங்களில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும்! ரணில் கவலை
நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்நியர் ஆட்சியின் போது கூட பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனவே, தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துகள்
இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர். 1931ஆம் ஆண்டின் பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்கள் (நன்கொடை) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி, விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துகள் விகாரைகளுக்கே உரியவை. நாம் தானமாக வழங்கும் அனைத்து தங்கப் பொருட்களும் ஆலயங்களுக்கு அல்லது விகாரைகளுக்கே சொந்தமானவை.
யாராவது இவற்றில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. 1815ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வோர் அரசியல் கட்சியும் இதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, மகா சங்கத்தினருடன் இணைந்து அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri