நண்பரின் வாகனத்துக்கு வாடகை செலுத்தினாரா கெஹெலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகை என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 240,000 ரூபாவை அமைச்சில் இருந்து பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சராக இருந்தபோது அவர் இந்த கட்டணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பதிவு எண்
வாடகையைப் பெறுவதற்காக சுகாதார அமைச்சுக்கு, அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் அவர் வழங்கிய பதிவு எண், கிருலப்பனையில் உள்ள ஒரு வாகன விற்பனை மையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் பதிவு எண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாதாந்தம் 240,000 ரூபா வாடகை ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தனித்தனி வழக்குகள்
எனினும், சுகாதார அமைச்சக பதிவுகளின்படி, அமைச்சர் பயன்படுத்தியதாக கூறப்படும் பென்ஸ் ரக சிற்றூந்து ஒருபோதும் சுகாதார அமைச்சக வளாகத்திற்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனை தவிர, ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி வழக்குகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




