இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
மோசடியான முறையில், மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களின் ஒரு தொகுதியை, மீண்டும் இறக்குமதி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முழுமையான ஆய்வின்படி, குறித்த வாகனங்கள்,போலியான மூன்றாம் நாட்டு ஆவணங்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வாகனங்கள் உள்ளூரில் சந்தைக்கு செல்வதை சுங்கத்திணைக்களம் தடுத்துள்ளது.
மோசடி
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், தொடர்புடைய கடன் கடிதங்கள் சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற இடங்களில் மூன்றாம் நாட்டில் திறக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ், வாகனங்களின் ஏற்றுமதி ஆய்வுச் சான்றிதழ்கள், குறித்த வாகனங்களின் தயாரிப்பு நாட்டில் உள்ள ஒரு வங்கியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாகும்.
இதேவேளை குறித்த மோசடி கண்டறியப்பட்ட நிலையில், அபராதம் செலுத்திய பிறகு வாகனங்களை சந்தைக்கு அனுமதிக்கக் கோரி சில இறக்குமதியாளர்கள், திறைசேரியின் அதிகாரிகளிடம் கோரிய போதும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri