அண்மையில் இறக்குமதியான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கீர்த்தி குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்கான அனுமதிக்கமைய 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும்.
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 2022 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.
இந்தநிலையில், வருடம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே 197 வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கீர்த்தி குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam
