ரணிலைச் சந்தித்தாரா ஹரிணி! வைத்தியசாலை சி.சி.ரி.வி. கமராக்களை சோதனை செய்ய அனுமதி
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சி.சி.ரி.வி. கமராக்களைச் சோதனை செய்வதற்கு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் உத்தரவு
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மாளிகாகந்த நீதவானிடம் இன்று( 28) தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சி.சி.ரி.வி. கமராக்களைச் சோதனை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
