டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு..!
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநருடன் கலந்துரையாட உள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (02.06.2025) டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பாக கண்டறிந்து கொள்வதற்கு நேரடி விஜயமொன்றை நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராச்சி மற்றும் கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோர் மேற்கொண்டிருநடதனர்.
இந்த விஜயத்தின் போது குறித்த வைத்தியசாலையின் நிறைகுறைகளை அறிந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளை பொருத்த வரையில் 4இலட்சம் பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையையே நாடி வருகின்றனர். கிளங்கன் வைத்தியசாலையில் 10 கட்டில்கள் இருக்கும் பட்சத்தில் 30 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக கலந்துரையாடல்
இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளை இன்றைய தினம் எமக்கு கண்டறிய கிடைத்தது. இது தொடர்பாக தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக மேலதிக கலந்துரையாடல் ஒன்றை வெகுவிரைவில் மத்திய மாகாண ஆளுநர் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் எதிர்வரும் 11ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடி தீர்வினை பெருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையை பொருத்தவரையில் எதிர்வரும் காலங்களில் இங்கு காணப்படுகின்ற குறைபாடுகளை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த வைத்தியசாலையை பொருத்த வரையில் மலையக பெருந்தோட்ட மக்கள் அநேகமானோர் நாளாந்த சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையை நாடி வருகின்றனர்.
எனவே, மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை தீர்ப்பதற்கு எமது அரசாங்கம் வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கும் குறிப்பிட்டார்.






காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
