பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. தலைமறைவான சந்தேகநபர் அதிரடி கைது!
புதிய இணைப்பு
டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர உறுதிபடுத்தியுள்ளார்.
குறித்த நபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி - திவா
முதலாம் இணைப்பு
டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க நகைகள்..
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையொட்டி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam