டயானா கமகேவுக்கு நேர்ந்தது குறித்து மனவருத்தப்படும் ரோகினி கவிரத்ன
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் நடந்த அவமானம் குறித்து தான் மனவருத்தப்படுவதாக ரோகிணி கவிரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஒரு கழிவகற்றும் வண்டி என்றும் நடத்தை கெட்டவர் என்ற ரீதியிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.
நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி , ஒரு பெண் உறுப்பினர் மீது தனிப்பட்ட வசைபாடல் மேற்கொள்ளப்பட்டமை குறித்து பொதுஜன பெரமுணவின் கோகிலா குணவர்த்தன எம்.பி. இன்று நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனம்
அதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஐக்கள் மக்கள் சக்தி ரோகிணி கவிரத்ன எம்.பி, டயானா கமகே மீதான வசைபாடல் குறித்து தான் மனவருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியின் திஸ்ஸ குட்டியாரச்சி எம்.பி. தன்னை தரக்குறைவாக பேசியபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்தி இருந்தால் தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கழிவு வண்டிகள் மோதிக் கொள்வதாக இருந்தால் அதனை முற்கூட்டியே அறியத்தருமாறும் இல்லாத பட்சத்தில் தம்மைப் போன்றவர்களின் உடல்களிலும் அசுத்தங்கள் பட்டுவிடும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
