இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் அக்ஸ்ஷி-யாராவின் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் முன்னணி கையடக்க தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் அக்ஸ்ஷி-யாரா (Dialog Axiata) , தனது செயல்பாட்டை இந்தியாவின் பாரதி ஏயார்டெல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைப்பதாக அறிவித்துள்ளது.
பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் டயலொக் அக்ஸ்ஷியாரா (Dialog Axiata) நிறுவனம் அறிவித்துள்ளது
கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று வெளியிட்ட அறிக்கை
பாரதி ஏயார்டெல் லங்கா லிமிடெட் நிறுவனத்துடன் சில விதிகளின் கீழ் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தமது நிறுவனம் தீர்மானித்துள்ளது என டயலொக் அக்ஸ்ஷியாரா (Dialog Axiata) , கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று (2.05.2023) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல்கள் இரண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலும் ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளுடனும் இடம்பெற்றுவருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டயலொக் அக்ஸ்ஷியாரா
முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது மற்றும் பொருத்தமான ஒழுங்குபடுத்தல் மற்றும் பங்குதாரர் ஒப்புதல்கள் உள்ளிட்ட தேவையான நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் டயலொக் அக்ஸ்ஷியாரா (Dialog Axiata) நிறுவனம் கூறியுள்ளது.
You may like this Video