ஒன்பது முக்கிய நீண்ட கோவிட் அறிகுறிகள் கண்டறிவு
புதிய ஆய்வு ஒன்றில், ஒன்பது முக்கிய நீண்ட கோவிட் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அறிகுறிகள் கோவிட் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஏற்படுவதாக என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆய்வு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.
தீவிரமான "கோவிட் "டுக்கு பிறகு தொடரும் அல்லது உருவாகும் அறிகுறிகளை விபரிக்க 'நீண்ட கோவிட்' என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீண்ட-கோவிட் அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டதாகவும், அவை பெண்களில் சற்று அதிகமாகவே இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய நீண்ட கோவிட் அறிகுறிகள் பின்வருமாறு,
அசாதாரண சுவாசம்
வயிற்று அறிகுறிகள்
கவலை/மனச்சோர்வு
மார்பு/தொண்டை வலி
அறிவாற்றல் பிரச்சனைகள்