தனுஷ்க குணதிலக்க சார்பில் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் மேன்முறையீடு
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சார்பில் நாளை (09) அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது.
சிட்னி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனுஷ்க குணதிலக்க வெளிநாட்டு பிரஜை என்பதாலும் அவரால் அவுஸ்திரேலிய வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியாததாலும் பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதற்கமைய, அவர் சார்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதான சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.




