நாட்டின் இன்றைய நிலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களும், தமிழ் தலைமைகளும் பதில் சொல்ல வேண்டும் (Photos)
இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த தமிழ் தலைமைகளும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் ஊடாக அரசாங்கம் கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வாழ்வாதாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கும் பணிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கிவைத்தார்.
இதன்கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான தொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
வரவு-செலவு திட்டம் ஊடாக அரசாங்கம் கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு கிராம மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் 158பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது முதல் கட்டமாக கடற்தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் 142 கடற்தொழிலாளர்களுக்கான வலைகளும் 12 பேருக்கான தோணிகளும் 04 பேருக்கான மீன் விற்பனைக்கான துவிச்சக்கர வண்டிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.





முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam