அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் நாளை முதல் பணி புறக்கணிப்பு!
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் விடுவிக்கக் கோரி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் நாளை முதல் பணிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு மேம்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க இதனை தெரிவித்தார்.
கூட்டு தொழில்கோரும் பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் - தென்னே ஞானானந்த தேரர் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தற்போது சட்டவிரோதமாக இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
எனவே, தமது சங்கமும், நாளை முதல் தங்கள் பணிகளை தவிர்ப்பதன் மூலம் நடந்துகொண்டிருக்கும் தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தம்மிக முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் சேவை சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேரை நீதிமன்றம் பிணையில் அனுமதித்த பின்னர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நேற்று முதல் அனைத்து ஆசிரியர்களும் இணையக் கற்பித்தலை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
