மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5 ஆண்டுகளாகியும் நியமனம் கிடைக்காத நிலையில், தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் இன்றைய தினம் (31.12.2025) முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமன கோரிக்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமக்கு நியமனம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியமனங்களை கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் குறித்த பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நியமனத்தை வழங்க கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 170 க்கு மேற்பட்டவர்களின் கையெழுத்து அடங்கிய முறைப்பாடு இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ரீ. எம்.றாகித் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


