இந்தியாவுடன் இணைந்து முக்கிய தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யும் ரணிலின் திட்டம்
திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக நாம் மாற்றவுள்ளோம்.
முதலீட்டு வலயம்
அவர்களிடம் இருந்து நாளொன்றுக்கு 400 டொலர்களை அறவிடுவோம். பருத்தித்துறை தொடக்கம் பானம வரையான பிரதேசத்தை பாரிய சுற்றுலாத்தளமாக மாற்றுவோம். அத்துடன், 3 விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
மேலும், அம்பாறை பிரதேசத்தில் ஒரு முதலீட்டு வலயத்தை உருவாக்கவுள்ளோம். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பிரதேசத்தையும் முன்னேற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |