யாழ்.மாநகர சபையின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பது கேள்விக்குறியே : து.ஈசன் (Photos)
யாழ் மாநகர சபைக்காக இன்னும் ஒரு வருடம் சபை நீடிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் இருந்தாலும் கூட அதற்கான அபிவிருத்தியினை செய்வதற்கான அந்த சூழ் நிலைகளை உருவாகுமா என்ற கேள்விக்குறி இப்போதும் இருக்கின்றது என யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட நாயன்மார் கட்டு குள அபிவிருத்திகள் இடம் பெறும் நிலையில் புனர்நிர்மானம் செய்யப்படாத நிலையில் உள்ள வடிகாலமைப்பினை மறுசீரமைக்கும் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் வகையில் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று நாயன்மார்கட்டு செவிப்புல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் மாநகரசபை உறுப்பினர் மதிவதனி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் கலந்துகொண்டு புனர்நிர்மானசெய்யப்படாத நிலையில் உள்ள வடிகாலமைப்பினை அங்குராப்பணம் செய்துவைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,
யாழ் மாநகர சபையின் 27 வட்டாரங்களில் 14 வட்டாரங்கள் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக வெற்றிதனதாக்கி யாழ் மாநகர சபைக்கான உறுப்பினர்களை கொண்டாலும் கூட அபிவிருத்தி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
நாங்கள் வென்று வந்த ஆட்சிதான் ஆனால் அவ்வாறான நிலை யாழ் மாநகர சபையில் இருக்கின்றதா என்ற கேள்வி தற்போது நிலவுகின்றது அதற்காக வேதனை அடைகின்றோம்.
வென்று வந்த உறுப்பினர்களை தாண்டி சில வேலைகள் குழப்புகின்ற நிலைக்கு பல உறுப்பினர்களை அனுப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கின்ற நிலை எற்பட்டுள்ளது.
இது அரசியல் நாகரீகம் அற்ற செயல் என்று பதிவு செய்யவிரும்புகின்றேன். கட்சி பேதங்களை கடந்து ஒன்று சேர்ந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அதுதான் எதிர்பார்ப்பாக இருக்கின்றது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களாகிய தர்சானந்தன்,நளிந்தா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.









