கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பகல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் அறிமுக உதவியுடன் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற முதலாம் காலாண்டுக்கான புதிய வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி,
பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்கள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின்
செயலாளர்கள் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொது
அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.








மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
