கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30மணிக்கு இனை தலைவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.
இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் துறைசார் திணைக்கள அதிகாரிகளெனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் துறை ரீதியான முன்னேற்றம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக சேவைகள், சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் போன்ற பல்வேறு விடையங்கள் இதில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam