அடிதடியில் முடிந்த அபிவிருத்தி குழு கூட்டம்
நுவரெலியா - கொத்மலை, கெட்டபுலாவ பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர், ஶ்ரீலங்கா சுதந்திர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ(Nimal Jayatissa) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் சுபாசித த சில்வா(Subashitha silva) ஆகியோருக்கும் இடையிலேயே இவ்வாறு பிரச்சினை ஏற்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஶ்ரீலங்கா சுதந்திர பெரமுனவின் ஆதரவாளர் ஒருவர் நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
