அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனையும் சாணக்கியன்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 30 வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நட முடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மட்டக்ளப்பு ஊடக அமையத்தில் இன்று (10.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கூறியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவரினால் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது பொய்யான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாத நிலையில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
