15 ஆண்டுகளின் பின் விடுதலையான தமிழ் அரசியல் கைதி
கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தேவதாஸ் கனகசபை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
குறித்த அரசியல் கைதியான தேவதாஸ் கணகசபை இன்றையதினம்(23.06.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கணகசபையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து
இந்நிலையில் அரசியல் கைதியின் விடுதலையை மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எமது ஊடக சேவையிடம் உறுதிப்படுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
