கோட்டாபய மீது ராஜபக்சக்களின் நெருங்கிய சகா பகிரங்க குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு மிகத் தவறானது என ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (28.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிப் பதவி
ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்ரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்ரசிங்கவை நியமித்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan
