மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரொருவருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு
மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரொருவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுண கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சஞ்சய சிரிவர்த்தனவுக்குச் சொந்தமான அத்தனகல்ல, பெதியாகொட, வெலிகடமுல்லை பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் இருந்து நேற்றைய தினம் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தது.
தடுப்புக் காவல் உத்தரவு
Tரக துப்பாக்கியொன்று, இரண்டு மெகசின்கள், 130 துப்பாக்கி ரவைகள், பல்குழல் துப்பாக்கியொன்றும் அதற்கான தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்கள் அவற்றில் உள்ளடங்கியிருந்தன.

இதனையடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சஞ்சய சிரிவர்த்தனவை இன்றைய தினம் பொலிஸார் அத்தனகல்லை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.
அதன் பிரகாரம் அவரை 48 மணிநேரங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri