திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு - காத்தான்குடி, நாவற்குடா பிரதேசத்தில் பாரிய இயந்திரத்தை கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரனால் நேற்று முன்தினம் (29.07.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுமார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கட்டடங்களுக்கான சீமந்து கலவை இயந்திரத்தில் உள்ள பாரிய இயந்திரத்தை திருடியமைக்காக மேற்படி இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பல லட்சம் ரூபாய் பெறுமதியான பாரிய குறித்த இயந்திரத்தை நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதைச் சேர்ந்த இளைஞர்கள் திருடியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இளைஞர்கள் காத்தான்குடிபொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் அ விசாரணை நடத்திய பின்னர் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது எட்டாம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
