தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மட்டக்களப்பில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (13.12.2023) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கடந்த நவம்பர் 27ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக
வாகனத்தில் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தினை அலங்கரிப்பதற்கான பொருட்களை
எடுத்துச் சென்ற போது, குறித்த வாகனத்தை பொலிஸார் மறித்து சாரதியை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை பார்பதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா மற்றும் அவரது மகன் ஆகியோர் பொலிஸ் நிலையம் சென்றிருந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்காக விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், சாரதி உட்பட மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு
இதனையடுத்து, அவர்களை 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதியை பிணையில் விடுவிப்பதற்காக கடந்தவாரம் முன்நகர்வு விண்ணப்பபத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் பிணையில் வெளிவந்ததுடன் ஏனைய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக இருவரும் மட்டு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
