மட்டக்களப்பில் தீ வைப்பு சம்பவம்: நீதிமன்றத்தின் உத்தரவு
மட்டக்களப்பில் நபரொருவரின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட் என்பவரின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீக்கிரையாக்கிய உடமைகள்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 38 பேரை கைது செய்துள்ளதுடன், மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று(04) 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினாரின் வீடு, ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட இதுவரை 38 பேரை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 28 பேர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏனைய 9 பேர் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணையில் நாளாந்தம் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri