போர் சுமந்த வட்டுவாகல் பாலம் அழிப்பு: அநுரவிற்கு நன்றி தெரிவித்த ரவிகரன் எம்.பி
வட்டுவால் பாலத்தின் நிலைமையை சீர் செய்வது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் அதனை சீர் செய்ய அவர் நிதி ஒதுக்கியுள்ளதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கங்களிடம் வட்டுவாகல் பாலத்தினை சீர்செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எமது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.அவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அத்தோடு, பழைய வட்டுவாகல் பாலத்தினுடைய சிறிய அடையாளம் ஆவது புதிய பாலத்தில் இருக்க வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கை.
இந்த விடயம் தொடர்பில் நாளை(2.6.2026) நடைபெறவுள்ள ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.