கிண்ணியாவில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றி அழிப்பு
கிண்ணியாவில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
சுகதார வைத்திய அதிகாரி.ஏ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் அலுவலக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் பொது மக்களின் முறைப்பாடுக்கு அமைய இன்று (14 )கிண்ணியா வாராந்த பொது சந்தையில் விஷேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைகள்
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 300kg க்கு மேற்பட்ட பெரிய வெங்காயங்கள் மற்றும் மரக்கறிகள் மொத்தமாக 460kg அளவிலான பொருட்கள் மஹரூப் நகர் பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த பொருட்களை விற்பனை செய்த வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு கைப்பற்றப்ட்ட பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
மேலும் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









