வெள்ளப்பெருக்கால் உடைப்பெடுத்த குளம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் மூலம் வேளாண்மை அனைத்தும் மணலினால் மூடப்பட்டுக் காணப்படுகின்றது.
அத்தோடு குளத்திற்குள் நீர் இல்லாமையினாலும், ஓரிரு தினங்களில் மழை இல்லாமல் போனால் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில் 125 விவசாயிகள் குறித்த குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று சாம்பல்கேணி குளத்தை நம்பி 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் குறித்த குளமானது வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்ததன் மூலம் குறித்த குளத்தில் உள்ள அனைத்து நீரும் வயல் பிரதேசத்திற்குப் பாய்ந்த நிலையில் குளம் நீர் குறைந்து காணப்படுகின்றது.
இங்கு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறித்த பகுதியில் வேளாண்மைச் செய்கை செய்து இருந்தாலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய காணிக்குள் மணல் பரந்து உள்ளதன் காரணமாகக் குறித்த பகுதி விவசாய செய்கையைக் கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்.
சாம்பல்கேனி குளத்தில் நீர் வற்றியதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பகுதியில் மழை இல்லாத நிலைமை காணப்படுமாக இருந்தால் சுமார் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தைக் கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்.
எனவே குறித்த எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களையும் புனரமைப்பு செய்ய உடனடியாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam